/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர்கள் மோதி விபத்து காயமடைந்த இருவர் பலி
/
டூவீலர்கள் மோதி விபத்து காயமடைந்த இருவர் பலி
ADDED : அக் 01, 2024 01:34 AM
டூவீலர்கள் மோதி விபத்து
காயமடைந்த இருவர் பலி
மல்லசமுத்திரம், அக். 1-
மானுவங்காட்டுபாளையத்தில், டூவீலர்கள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த, இருவரும் பலியாகினர்.
மல்லசமுத்திரம் அருகே, சப்பையாபுரம் கிராமம், கரட்டுபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியர் சோமசுந்தரம், 54, சித்ரா, 44; இவர்கள், கடந்த, 27 இரவு, 10:00 மணிக்கு, கருமனுாரில் ஒரு துக்க காரியத்திற்கு சென்றனர். பின், 'டி.வி.எஸ்.,' டூவீலரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்செங்கோட்டில் உள்ள பெயின்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும், காளிப்பட்டி செங்குந்தர்மண்டப தெரு பகுதியை சேர்ந்த ஊழியர் வெங்கடேஷ், 31, அதிவேகமாக டூவீலர் ஓட்டிவந்து, தம்பதியர் டூவீலர் மீது மோதினார்.
இதில், மூவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மூவரையும் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, வெங்கடே ைஷ சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், கடந்த, 28ல் சித்ரா உயிரிழந்தார். நேற்று முன்தினம் இரவு, வெங்கடேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து, மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.