/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகள் இறந்த துக்கம் தாளாமல் தாய் துாக்கிட்டு தற்கொலை
/
மகள் இறந்த துக்கம் தாளாமல் தாய் துாக்கிட்டு தற்கொலை
மகள் இறந்த துக்கம் தாளாமல் தாய் துாக்கிட்டு தற்கொலை
மகள் இறந்த துக்கம் தாளாமல் தாய் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூலை 27, 2025 12:47 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே, நல்லாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த பிரகாசம் மனைவி கவிதா, 40; பொன்மலர்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். தம்பதியரின் ஒரே மகள் கீர்த்திவாசனி, 15; பத்தாம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் பிரகாசம் இறந்துவிட்டதால், தாய், மகள் இருவர் மட்டுமே, நல்லாகவுண்டம்பாளையத்தில் வசித்து வந்தனர்.
'ரிசல்ட்' பயத்தில் இருந்த கீர்த்திவாசனி, மே, 15ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரும் இறந்த நிலையில், ஒரே மகள் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால், கவிதா மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும், கவிதா வீட்டைவிட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கவிதாவின் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, அவர் துாக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார். ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.