ADDED : ஏப் 21, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம் ::மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டி அருகே, கோணங்கிபாளையம் பிரிவு பகுதியில், நேற்று நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி கவுதம் தலைமையில், தலைமை காவலர் ஜனகராஜ் மற்றும் இரண்டு கர்நாடக போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நல்லாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா, 41, என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த, 50,000 ரூபாயை பறிமுதல் செய்து, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
