ADDED : டிச 18, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பருத்தி வயலில் வடியாத மழைநீர்
சேந்தமங்கலம், டிச. 18-
கொல்லிமலையில் கொட்டி தீர்த்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்மசமுத்திம், துத்திக்குளம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி, தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக மாறி அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்தது. இதனால், இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் தேங்கின. இந்நிலையில், காட்டாற்று வெள்ளம் வந்து, 10 நாட்களை கடந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் விளை நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் குறைந்துவிட்டது. ஆனால், பெரியகுளம் பஞ்., பட்டத்தையன்குட்டை பகுதியில் பருத்தி வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் குறையாமல், ஈரப்பதம் அதிமாக உள்ளது.