/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரி மோதி அடையாளம் தெரியாதவர் உயிரிழப்பு
/
லாரி மோதி அடையாளம் தெரியாதவர் உயிரிழப்பு
ADDED : மே 11, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில், 50 வயதுடைய ஒருவர், நேற்று மாலை சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த லாரி, இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் தலை நசுக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மொளசி போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர், அப்பகுதியில் சில நாட்களாக சுற்றித்திரிந்து வந்துள்ளார். அவர் யார்? பெயர்? எந்த ஊர்? உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. மொளசி போலீசார், விபத்துக்கு காரணமான லாரியை தேடி வருகின்றனர்.