/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருப்பு பேட்ஜ், கொடியுடன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கருப்பு பேட்ஜ், கொடியுடன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
கருப்பு பேட்ஜ், கொடியுடன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
கருப்பு பேட்ஜ், கொடியுடன் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2024 01:28 AM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில், மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கருப்பு பேட்ஜ், கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். இதில், புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திணிக்கும் வேலையை கைவிட வேண்டும். மாநிலங்கள் வெளியிட்ட அறி-விப்புகளை, புதிய சட்டங்கள் அமலாக்கும் வகையில் தேவைப்-படும் பல
மாற்றங்களை செய்து, புறவாசல் வழியாக திணிக்க கூடாது. 100 ஆண்டுக்கும் மேலாக போராடி பெற்ற உரிமைகளை, புதிய சட்டங்கள் மூலம் பறிக்கக்கூடாது. புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மூலம் சங்கம் அமைக்கும்
உரிமை, கூட்டு பேர உரிமையை பறிக்காதே. குறைந்தபட்ச ஊதியம், 8 மணி நேர வேலை போன்ற தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை பறிக்கக்-கூடாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி
மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணத்திற்கு விதிக்கப்படும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

