/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குல தெய்வம் கோவில், ஆஞ்சநேயரை வழிபட்ட பின் தொகுதிக்கு புறப்பட்டார் மத்திய அமைச்சர் முருகன்

ADDED : மார் 25, 2024 07:19 AM
நாமக்கல் : நீலகிரி லோக்சபா தொகுதியின், பா.ஜ., வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான முருகன், நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் குலதெய்வ கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தன் தொகுதிக்கு புறப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், கோனுாரை சேர்ந்தவர் முருகன். இவர், மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார். இவர், லோக்சபா தேர்தலில், நீலகிரி தொகுதியின், பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர், நீலகிரி தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். முன்னதாக, நேற்று நாமக்கல்லுக்கு வந்த அவர், தன் பெற்றோரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து, மோகனுார், கே.புதுப்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின், நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அதன்பின், பா.ஜ., மூத்த பிரமுகர்களை சந்தித்து ஆசி பெற்றவர், நீலகிரி புறப்பட்டு சென்றார். நகர பா.ஜ., தலைவர் சரவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், நாமக்கல் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.