/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
1 ஏக்கரில் 18 குவின்டால் பஞ்சு அறுவடை விவசாயிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
/
1 ஏக்கரில் 18 குவின்டால் பஞ்சு அறுவடை விவசாயிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
1 ஏக்கரில் 18 குவின்டால் பஞ்சு அறுவடை விவசாயிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
1 ஏக்கரில் 18 குவின்டால் பஞ்சு அறுவடை விவசாயிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
ADDED : ஜூலை 13, 2025 01:21 AM

நாமக்கல்,:ஒரு ஏக்கரில், 18 குவின்டால் பஞ்சு அறுவடை செய்து சாதனை படைத்த நாமக்கல் விவசாயியை, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பாராட்டினார்.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நாக்பூர் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில், 'பருத்திக்கான சிறப்பு முன்னோடி திட்டம்' என்ற புதிய திட்டம், இரண்டு ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அடர் நடவு முறை பருத்தி சாகுபடி மூலம், புதிய ரகங்களை அறிமுகம் செய்து, பருத்தியின் உற்பத்தியை பெருக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
அதன்படி, அடர் நடவு பருத்தி சாகுபடி, 71 ஏக்கர், நீண்ட இழை பருத்தி சாகுபடி, 20 ஏக்கர் என, மொத்தம், 91 ஏக்கரில், 53 விவசாயிகள் பயனடையும் வகையில், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனுார் ஆகிய, நான்கு வட்டாரங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில், நாமகிரிப்பேட்டை யூனியன், ஒடுவன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி ராமசாமி, ஒரு ஏக்கருக்கு, 18 குவின்டால் பஞ்சு அறுவடை செய்து, நல்ல மகசூலை ஈட்டி சாதனை படைத்தார்.
கோவையில் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில், பருத்தி உற்பத்தியை பெருக்குவதற்கான பங்குதாரர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்தது.
அப்போது, ஒரு ஏக்கருக்கு, 18 குவின்டால் பஞ்சு அறுவடை செய்து சாதனை படைத்த விவசாயி ராமசாமியை பாராட்டி, அமைச்சர் சான்றிதழ் வழங்கினார்.