/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மத்திய அமைச்சர் வருகை; 'டிரோன்கள்' பறக்க தடை
/
மத்திய அமைச்சர் வருகை; 'டிரோன்கள்' பறக்க தடை
ADDED : ஏப் 08, 2024 07:31 AM
நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன், பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து, நாமக்கல்லில் இன்று, 'ரோடு ேஷா' நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாமக்கல் வருகிறார். இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில், 'டிரோன்' கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகையையொட்டி, இன்று ஒரு நாள் மட்டும், நாமக்கல் மாவட்டத்திற்குள், 'டிரோன்கள்' பறக்க தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

