ADDED : ஜன 06, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: நா.த.க., சார்பில், ப.வேலுாரில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், மண்டல செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலந்தாய்வு கூட்டத்தில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடந்தது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்-டத்தில் முக்கிய நிர்வாகிகள் தேர்வு குறித்து கலந்தாலோசிக்கப்-பட்டது. முன்னதாக, ப.வேலுார் அரசு மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினர். நாமக்கல் மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்-டனர்.

