/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நா.த.க., சீமான் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
நா.த.க., சீமான் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 01, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நா.த.க., சீமான் கைது
கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஜன. 1-
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து, நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நா.த.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து, நாமக்கல் மணிக்கூண்டு அருகே, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் அரவிந்த், திருப்பூர் சுடலை தலைமையில், மண்டல செயலாளர்கள் ஹரிஹரன், ஆனந்த் உள்ளிட்ட, 35 பேர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

