/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் அப்பர் அறக்கட்டளை உழவாரப்பணி
/
மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் அப்பர் அறக்கட்டளை உழவாரப்பணி
மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் அப்பர் அறக்கட்டளை உழவாரப்பணி
மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் அப்பர் அறக்கட்டளை உழவாரப்பணி
ADDED : ஏப் 14, 2025 06:49 AM
நாமக்கல்: கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட கிளை, நாமக்கல் மனவளக்கலை மன்ற அறிவுத்திருக்கோவில் சார்பில், நாமக்கல் அடுத்த கீழ் சாத்தம்பூர் மல்லிகார்ஜூனேஸ்வரர் சிவன் கோவிலில், உழவாரப்பணி நடந்தது. கோவில் வளாகத்தில், அப்பர் உழவாரப்பணி அறக்கட்டளை துவக்க விழாவும் நடந்தது. துவக்க விழாவில், அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர் சங்க செயலாளரும், நாமக்கல் மனவளக்கலை மன்ற தலைவருமான உதயகுமார் வரவேற்றார்.
கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர் சங்கத்தின், நாமக்கல் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். இணை செயலாளர் தில்லை சிவக்குமார் தொடங்கி வைத்தார். கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் குருவாயூரப்பன், கீழ்சாத்தம்பூர் சிவன் கோவில் தல வரலாறு குறித்து பேசினார். மனவளக்கலை மன்றத்தின் சேலம் மண்டல தலைவர் உழவன் தங்கவேலு, நாமக்கல் மனவளக்கலை மன்ற செயலாளர் சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உழவார பணியில், சிவன் கோவிலில் உள்பிரகாரம் வெள்ளை அடிக்கப்பட்டு, கோவிலின் பின்புறம் உள்ள நந்தவனம் சுத்தம் செய்யப்பட்டு, அங்கு, 27 நட்சத்திரங்களுக்கு உரிய தெய்வீக மரங்கள் நடப்பட்டன.