/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு விடுமுறை நாளில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்திற்கு பூட்டு: பொதுமக்கள் சிரமம்

ADDED : செப் 06, 2025 01:25 AM
நாமக்கல் ;அரசு விடுமுறை நாளில், நகர்ப்புற நல்வாழ்வு மையம் மூடப்பட்டிருந்ததால், சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நாமக்கல்-மோகனுார் சாலையில், நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 'நகர்ப்புற நல்வாழ்வு மையம்' அமைக்கப்பட்டது. இங்கு, ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். காலை, 8:00 முதல், மாதியம், 12:00 மணி வரையும், மாலை, 4:00 முதல், இரவு, 8:00 மணி வரையும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலரும் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'மிலாடி நபியை' முன்னிட்டு, நேற்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால், அலுவலர்கள், பணியாளர்கள் விடுமுறை காரணமாக, அரசு துறை அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில், நாமக்கல் நகரில் அமைந்துள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையம் நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூட்டப்பட்டது. அதனால், அங்கு சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் சிரமத்துடன் திரும்பி சென்றனர்.