/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
/
கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்
ADDED : அக் 25, 2025 01:33 AM
எருமப்பட்டி, செல்லிபாளையம் ஏரியில் முளைத்துள்ள, கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எருமப்பட்டி, துறையூர் ரோட்டில் உள்ள செல்லிபாளையத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. கொல்லிமலையில் கன மழை பெய்தால், மழைநீர் காற்றாற்று வெள்ளமாக மாறி ஏரிக்கு நேரடியாக தண்ணீர் வரும் வகையில் நீர்வழிப்பாதை உள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு கொல்லிமலையில் பெய்த கன மழையால் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. விவசாயிகள் நெல், மஞ்சள் பயிரிட்டனர்.
இந்நிலையில், ஏரியில் அதிகளவில் கருவேல மரங்கள் முளைத்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருவதுடன், ஏரியில் ஈரப்பதம் குறைந்து வருகிறது. எனவே, ஏரியில் முளைத்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

