/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாகனம் மோதி பாத்திர வியாபாரி பலி
/
வாகனம் மோதி பாத்திர வியாபாரி பலி
ADDED : செப் 22, 2024 06:26 AM
குமாரபாளையம்: டூவீலர்கள் மோதிய விபத்தில் கீழே விழுந்த பாத்திர வியாபாரி மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை நசுங்கி உயிரிழந்தார்.
குமாரபாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் ரவி, 58; பாத்திர வியாபாரி. இவர், நேற்று முன்தினம் மாலை, 6:45 மணிக்கு, 'ஹோண்டா சைன்' டூவீலரில் வெப்படை சாலை, காவடியான்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த, 'பஜாஜ் பல்சர்' டூவீலர், ரவியின் டூவீலர் மீது மோதியது. இதில், டூவீலர் நிலைதடுமாறி ரவி கீழே விழுந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாக வாகனம் மோதியதில், ரவி தலை நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து ரவியின் மகன் மனோஜ்குமார் கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார், டூவீலர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய, வெப்படையை சேர்ந்த கூலித்தொழிலாளி கவுரிசங்கர், 27, என்பவரை கைது செய்தனர். மேலும், விபத்துக்கு காரணமான நான்கு சக்கர வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.