sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை, அபிஷேக முன்பதிவு டிச.,1ல் துவக்கம்

/

ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை, அபிஷேக முன்பதிவு டிச.,1ல் துவக்கம்

ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை, அபிஷேக முன்பதிவு டிச.,1ல் துவக்கம்

ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை, அபிஷேக முன்பதிவு டிச.,1ல் துவக்கம்


ADDED : நவ 29, 2024 07:37 AM

Google News

ADDED : நவ 29, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடை மாலை, அபி ஷேகம் முன்பதிவு டிச., 1ம் தேதி முதல் துவங்குகிறது.

நாமக்கல், கோட்டை பகுதியில் ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார். தினசரி காலை, 9:00 மணியளவில் சுவாமிக்கு, 1,008 வடை மாலை அலங்காரம் நடைபெறும். 10:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபி ஷேகம் நடைபெறும். வடை மாலை சாத்துபடி அலங்காரம் மற்றும் அபி ஷேகம் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே நடக்கும்.

கட்டளைதாரர்கள் மூலம் நடைபெறும் அபி ஷேகத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில், அடுத்த ஆண்டுக்கான அபி ஷேக முன்பதிவு துவக்கப்படும். அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான முன்பதிவு டிச., 1ம் தேதி முதல் கோவில் அலுவலகத்தில் துவங்குகிறது. ஒரு நாளில் தலா, 7,000 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி, ஆறு பேர் அபிஷேகத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது ஒருவரே, 42 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, ஒரு நாள் முழு அபி ஷேகத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பக்தர்கள் கோவில் அலுவலகத்துக்கு நேரில் வந்து, முழு கட்டணத்தையும் செலுத்தி, அபி ஷேகத்திற்கு தங்களுக்கு விருப்பமான தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 0428 623 3999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, கோவில் செயல் அலுவலரும், ஹிந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us