/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் வல்வில் ஓரி நிறைவு விழா 190 பயனாளிக்கு ரூ.2.67 கோடியில் நலத்திட்டம்
/
கொல்லிமலையில் வல்வில் ஓரி நிறைவு விழா 190 பயனாளிக்கு ரூ.2.67 கோடியில் நலத்திட்டம்
கொல்லிமலையில் வல்வில் ஓரி நிறைவு விழா 190 பயனாளிக்கு ரூ.2.67 கோடியில் நலத்திட்டம்
கொல்லிமலையில் வல்வில் ஓரி நிறைவு விழா 190 பயனாளிக்கு ரூ.2.67 கோடியில் நலத்திட்டம்
ADDED : ஆக 04, 2025 08:48 AM
நாமக்கல்: 'வல்வில் ஓரி' நிறைவு விழாவில், 190 பயனாளிகளுக்கு, 2.67 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. 2ம் நாளான நேற்று, கலைபண்பாட்டுத்துறை சார்பில், இசை கலைஞர்களின் பரத நாட்டியம், கரகம், மாடு ஆட்டம், மயில் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றை கலெக்டர் துர்காமூர்த்தி பார்வையிட்டார்.
தொடர்ந்து செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடந்த நிறைவு விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரண்டு பேருக்கு, 1.92 லட்சம் ரூபாய் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தாட்கோ சார்பில், 14 பேருக்கு, கறவை மாடு, பல்பொருள் அங்காடி, பவர் டில்லர் போன்றவற்றிக்கு, ஒரு கோடியே, 68 லட்சத்து, 26,939 ரூபாய் மதிப்பில் மானிய உதவிகள் உள்பட மொத்தம், 190 பயனாளிகளுக்கு, 2.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும், வல்வில் ஓரி விழா சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறை அலுவலர்களுக்கும், சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். வல்வில் ஓரி மற்றும் சுற்றுலா விழாவில் நடந்த பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட, 370 பள்ளி மாணவ, மாணவியர், வில்வித்தை போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கும், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கும் பதக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.எம்.எல்.ஏ., பொன்னுசாமி, மாவட்ட வன அலுவலர் மாதவியாதவ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி, மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.