/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வல்வில் ஓரி விழா; எஸ்.பி., ஆய்வு
/
வல்வில் ஓரி விழா; எஸ்.பி., ஆய்வு
ADDED : ஜூலை 30, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், கொல்லிமலையில் ஆக.,2, 3ம் தேதியன்று நடக்கவிருக்கும் வல்வில் ஓரி விழாவிற்கான, பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா நேரில் ஆய்வு செய்தார்.
கொல்லிமலையில், ஆண்டுதோறும் ஆடி பெருக்கு அன்று வல்வில் ஓரி விழா நடப்பது வழக்கம். ஆக., 2, 3 ஆகிய நாட்களில் நடக்கவுள்ள வல்வில் ஓரி விழாவிற்காக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவர். எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதேபோல் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், வாகனங்களை உடனுக்குடன் அங்கிருந்து வெளியேற்ற அறிவுறுத்தினார்.

