ADDED : ஜன 31, 2026 06:34 AM
நாமக்கல்:தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாலுகா அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம், 3 நாள் நீடித்தது.
தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், கிராம நிர்வாகத்தில் முதுகெலும்பாக திகழும் வி.ஏ.ஓ., அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட்ட அலுவலகமாக அமைத்து தரவேண்டும்.கிராம நிர்வாக அலுவலர்களின் டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என, மாற்றியமைக்க வேண்டும். தேர்வுநிலை வி.ஏ.ஓ.,க்களுக்கு, முதுநிலை ஆர்.ஐ., நிலையில் ஊதியமும், சிறப்பு நிலை வி.ஏ.ஓ.,க்களுக்கு, துணை தாசில்தார் நிலையில் ஊதியமும் வழங்க வேண்டும் என்பன உள்பட, 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 3ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
