/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'டிஜிட்டல் கிராப் சர்வே' பணி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்
/
'டிஜிட்டல் கிராப் சர்வே' பணி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்
'டிஜிட்டல் கிராப் சர்வே' பணி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்
'டிஜிட்டல் கிராப் சர்வே' பணி வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம்
ADDED : செப் 20, 2024 03:21 AM
மேட்டூர்: வேளாண் துறை செய்ய வேண்டிய டிஜிட்டல் கிராப் சர்வே பணி, வி.ஏ.ஓ.,க்களிடம் மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த பணிக்கு பிற மாநிலங்களை போல கூடுதல் பணியாளர் நிய-மித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, மேட்டூர் தாலுகா அலுவலகம் முன், கடந்த, 9ல் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2ம் கட்டமாக நேற்று, மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்-பாட்டம் நடந்தது. அதேபோல் சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்-பாட்டம் நடந்தது. சேலம் மாவட்ட வி.ஏ.ஓ.,க்கள் சங்க துணைத்-தலைவர் ராமசாமி தலைமை வகித்து பேசினார். மாவட்ட பிர-சார அணி கொள்கை பரப்பு செயலர் முருகன், சங்ககிரி தாலுகா சங்க தலைவர் மணி, இடைப்பாடி தாலுகா தலைவர் அப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ், தாலுகா தலைவர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.