/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வி.ஏ.ஓ., மனைவி துாக்கிட்டு தற்கொலை
/
வி.ஏ.ஓ., மனைவி துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூலை 31, 2025 02:00 AM
நாமக்கல், நாமக்கல் கணேசபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்கண்ணன், 49; நல்லிபாளையத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திரா, 39; இவர்களுக்கு, 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது, ஏழு வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். செந்தில்கண்ணன், நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம், 2:30 மணிக்கு, சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, இந்திரா வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தில்கண்ணன், நாமக்கல் போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இந்திராவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், இந்திரா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்வது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
அதனால் மனமுடைந்த இந்திரா தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.