தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.2 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி துவக்கம்

ரூ.2 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி துவக்கம்

ரூ.2 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணி துவக்கம்


ADDED : பிப் 27, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்; ராசிபுரத்தில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

ராசிபுரம் தொகுதியில், 854 கோடி ரூபாய் மதிப்பில், 523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்-டுக்குடிநீர் திட்டம் மற்றும் போதமலையில், 34.12 கோடி ரூபாய் மதிப்பில், 9.90 கி.மீ துாரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்தன. இந்நி-லையில், ராசிபுரம் நகராட்சியில் நேற்று புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா நடந்தது.ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதி-வேந்தன் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். ராசிபுரம் நகராட்சி, 16-வது வார்டு தினசரி சந்தை வளாகத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியான, 13.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதை அமைச்சர் நேற்று திறந்து வைத்து கார்டு-தாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.03 கோடி ரூபாய் மதிப்பில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம், 2.16 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் மதி-வேந்தன் அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us