/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேங்கைவயல் சம்பவம் குறித்து வெண்ணந்துாரில் வி.சி., ஆர்ப்பாட்டம்
/
வேங்கைவயல் சம்பவம் குறித்து வெண்ணந்துாரில் வி.சி., ஆர்ப்பாட்டம்
வேங்கைவயல் சம்பவம் குறித்து வெண்ணந்துாரில் வி.சி., ஆர்ப்பாட்டம்
வேங்கைவயல் சம்பவம் குறித்து வெண்ணந்துாரில் வி.சி., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 06, 2025 05:54 AM
வெண்ணந்துார்: வேங்கைவயல் சம்பவத்தில், வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்து, வெண்ணந்துாரில் வி.சி.க., பேரூர் செயலாளர் நடராஜர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மண்டல துணை செயலர் அரசன் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் தாலுகா, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கு பதிவு செய்த, மாநில குற்றப்பிரிவு காவல் துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது.
இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு துறை விசாரணைக்கு, தமிழ்நாடு அரசு
ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வணிகர் அணி மாநில துணை செயலர் செங்குட்டுவன், ஒன்றிய பொருளாளர் செங்கோட்டுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.