/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீரகாரன் கோவில் கும்பாபிஷேக விழா
/
வீரகாரன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 17, 2025 02:29 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில் புடவைகாரியம்மன், நாகம்மாள், எல்லம்மாள், லிங்கம்மாள், கன்னிமார், வீரகாரன் சுவாமிகளுக்கு புதிய கோவில் கட்டப்பட்டது.
இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்துக்கொண்டு புடவைகாரியம்மன் கோவிலுக்கு வரப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு மேல் கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், முதற்கால ஹோம பூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு சாந்தி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம் நடந்தது. காலை, 9:00 முதல், 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.