/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாகன சோதனை: ரூ.2.50 லட்சம் அபராதம்
/
வாகன சோதனை: ரூ.2.50 லட்சம் அபராதம்
ADDED : ஜன 28, 2024 11:03 AM
நாமக்கல்: நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன் மற்றும் முருகேசன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், சக்திவேல், உமாமகேஸ்வரி, நித்யா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நாமக்கல் பகுதியில், நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, 70 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் நடத்தப்பட்ட சோதனையில், அதிக ஒலி எழுப்பிய, 20 பஸ்களில் இருந்து ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த, 3 நாட்களில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய, 100 வாகன ஓட்டிகளுக்கு, 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.