/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அனுமதியின்றி பா.ஜ.,வினர் வாகன பேரணி
/
அனுமதியின்றி பா.ஜ.,வினர் வாகன பேரணி
ADDED : ஆக 15, 2024 06:54 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில், சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, பா.ஜ.,வினர் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியதுடன், பொதுமக்கள் வீடுகளிலும் ஏற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள், தேசிய கொடியுடன் வாகன பேரணி நடத்தினர். ஆண்டகளூர்கேட் பகுதியில் தொடங்கி ராசிபுரம், புதிய பஸ் ஸ்டாண்ட், கோனேரிப்பட்டி, பழைய பஸ் ஸ்டாண்ட், முத்துக்காளிப்பட்டி வழியாக, 20 கிலோ மீட்டர் துாரத்திற்கு, 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தேசிய கொடியுடன் பேரணி சென்றனர். பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில், பேரணி சென்ற, 50க்கும் மேற்பட்டோரை ராசிபுரம் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.