/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காவிரியாற்று பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
/
காவிரியாற்று பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை
ADDED : மே 12, 2024 12:41 PM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் காவிரியாற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் - ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், பழைய பாலம் என, இரண்டு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு பாலத்தையும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதனால், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பிரிவு பகுதியில் இருந்து, ஒன்பதாம்படி ஆற்றுப்பகுதி வரை, ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
காவிரியாற்றின் குறுக்கே உள்ள பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல, நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பழைய பாலம் வெறிச்சோடி காணப்பட்டது. பழைய பாலம் வழியாக சென்று வந்த வாகனங்கள், உயர்மட்டம் பாலம் வழியாக செல்லும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.