/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர் தேவை
/
வெண்ணந்துார் மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர் தேவை
வெண்ணந்துார் மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர் தேவை
வெண்ணந்துார் மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர் தேவை
ADDED : டிச 13, 2024 01:29 AM
வெண்ணந்துார், டிச. 13-
வெண்ணந்துாரில், நகர காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
நகர காங்., கமிட்டி தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் தங்க முத்து, காசி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வெண்ணந்துார் அரசு மருத்துவமனைக்கு அதிக நோயாளிகள் வருகின்றனர். போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்திருக்கும் வணிக கட்டடங்களுக்கான வாடகைக்கு, 18 சதவீதம்
ஜி.எஸ்.டி., வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். ராசிபுரத்தில் இருந்து வெண்ணந்துார், காக்காபாளையம் வழியாக பவானிக்கு பஸ் இயக்கம் வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.