/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் ஒன்றிய தி.மு.க., ஆலோசனை
/
வெண்ணந்துார் ஒன்றிய தி.மு.க., ஆலோசனை
ADDED : அக் 10, 2024 02:00 AM
வெண்ணந்துார் ஒன்றிய
தி.மு.க., ஆலோசனை
வெண்ணந்துார், அக். 10-
வெண்ணந்துார் ஒன்றிய தி.மு.க., ஆலோசனை கூட்டம், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, வரும், 15ல் நாமக்கல் நகரில் நடைபெறும் மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் தி.மு.க., தலைவருமான கருணாநிதியின் உருவ சிலை திறப்பு விழா மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தரும், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் கவுரி, சட்டசபை தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.