/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேணுகோபால் சுவாமி கோவில் தேர் திருவிழா
/
வேணுகோபால் சுவாமி கோவில் தேர் திருவிழா
ADDED : பிப் 23, 2024 01:35 AM
நாமகிரிப்பேட்டை;நாமகிரிப்பேட்டையில் வரலாற்று சிறப்புமிக்க ருக்மணி சத்யபாமா, சமேத வேணுகோபால் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில், திருக்கல்யாணம் மற்றும் ரத உற்வசம் நடப்பது வழக்கம். இந்தாண்டு ரத உற்சவம், கடந்த வாரம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வாரம் தேருக்கு பூஜை நடத்தப்பட்டது. இன்று கொடியேற்றமும், திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையொட்டி, இன்று மதியம், புரோகிதர்கள் மந்திரம் முழங்க, பக்தர்கள் முன்னிலையில் வேணுகோபால் சுவாமி, ருக்மணி, சத்யபாமா சுவாமிகளுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை, குதிரை வாகனத்தில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு கொண்டுவரும் நிகழ்ச்சியும், மாலை, 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. எம்.பி., ராஜேஸ்குமார், அமைச்சர் மதிவேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.