/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
/
100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 29, 2025 01:30 AM
நாமக்கல், கொன்னையார் பகுதி மக்களுக்கு, 100 நாள் வேலை வழங்கக்கோரி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் பழனிவேலு, மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொன்னையார் கிராமத்தில், 100 நாள் வேலை திட்ட அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு, 100 நாள் வேலை வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்த, 336 ரூபாய் சம்பளத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேஷம் எழுப்பினர். இதில், நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர்
பங்கேற்றனர்.