/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாக்கடை கழிவு நீரால் கிராம மக்கள் அவதி
/
சாக்கடை கழிவு நீரால் கிராம மக்கள் அவதி
ADDED : செப் 12, 2025 01:36 AM
நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் ஒன்றியம் கல்குறிச்சி கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் க.வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முதல், சூளமேடு வரை சிறு பாலத்துடன் கூடிய கழிவுநீர் வாய்க்கால் அமைக்க, 4.35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இப்பணி முடிந்துள்ள நிலையில் தற்போது கால்வாயில் தண்ணீர் வெளியே செல்ல போதுமான வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. கழிவு நீர் நாடார் தெருவில் வழிந்தோடுவதால், சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
மழை காலத்தில் சாக்கடை நீர் வீதி முழுவதும் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் கழிவுநீர் தேங்காதவாறு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.