/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏ.டி.எம்., கொள்ளை விசாரணை விசாகப்பட்டினம் போலீசார் வருகை
/
ஏ.டி.எம்., கொள்ளை விசாரணை விசாகப்பட்டினம் போலீசார் வருகை
ஏ.டி.எம்., கொள்ளை விசாரணை விசாகப்பட்டினம் போலீசார் வருகை
ஏ.டி.எம்., கொள்ளை விசாரணை விசாகப்பட்டினம் போலீசார் வருகை
ADDED : அக் 01, 2024 01:36 AM
ஏ.டி.எம்., கொள்ளை விசாரணை
விசாகப்பட்டினம் போலீசார் வருகை
பள்ளிப்பாளையம், அக். 1-
ஏ.டி.எம்., கொளையர்கள் குறித்து விசாரிக்க, விசாகப்பட்டினம் போலீசார், நேற்று வெப்படை போலீஸ் ஸ்டேஷன் வந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில், கடந்த, 27ல், ஏ.டி.எம்.,ஐ உடைத்து பணம் கொள்ளை அடித்த ஹரியானா கொள்ளையர்கள், நாமக்கல் மாவட்டம் வழியாக தப்பிக்க முயன்றனர். அவர்களை, பள்ளிப்பாளையம், வெப்படை அடுத்த சன்னியாசிப்பட்டியில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, கேரளா, ஆந்திரா மாநில போலீசார், வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணிக்கு விசாகப்பட்டினம் போலீசார் வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். அவர்கள், விசாகப்பட்டினம் பகுதியில், கடந்த ஆக., - செப்., மாதங்களில் மட்டும், 9 ஏ.டி.எம்., மையங்களில், 1.67 கோடி ரூபாய் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, தற்போது பிடிபட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என, வெப்படை போலீசாரிடம் விசாரித்தனர்.