/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் முடிவு
/
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் முடிவு
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் முடிவு
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் முடிவு
ADDED : மார் 18, 2024 03:26 AM
நாமக்கல்: 'வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது' என, விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் சார்பில், 46-வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், நேற்று நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். மாநில பேரவை தலைவர் தங்கராஜ், பொதுச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ., அகில இந்திய மகளிரணி தலைவி வானதி, எம்.எல்.ஏ., பங்கேற்றார்.
அவர் கூட்டத்தில் பேசியதாவது:
பா.ஜ.,வும், பிரதமர் மோடியும் விஸ்வகர்மா சமுதாய மக்களுக்காக, அவர்கள் தொழில் சார்ந்த திட்டங்களாகட்டும் அல்லது அரசியல் அதிகாரமாகட்டும் எதுவாக இருந்தாலும், அத்தனை பேரையும் முன்னேற்ற வேண்டும்; அவர்களையும் அரவணைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறார். பிரதமர் தேர்தலில், விஸ்வகர்மா சமுதாயத்தினுடைய ஓட்டுகளை, பிரதமர் மோடி, 3-வது முறையாக பிரதமராவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். விஸ்வகர்மா சமுதாயத்தினர் கொடுக்கும் கைவினை பொருட்களை தான், பிரதமர் மோடி மற்ற நாடுகளுக்கு செல்லும்போது கொண்டு செல்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது. வரும் காலங்களில், விஸ்வகர்மா பிரதிநிதிகளுக்கு லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் இடமளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

