ADDED : ஜன 24, 2026 06:14 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சியில், 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஓட்டளிப்பதின் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், மக்களாட்சியின் மீது பற்று உடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்மு-டைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தலில், தேர்தல்-களின் மாண்பை நிலை நிறுத்துவோம் என்றும்;
மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, மொழி ஆகியவற்றின் தாக்-கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு துாண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என, உறுதி-மொழி ஏற்றனர். திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு, உறுதிமொழி வாசிக்க நகராட்சி ஊழியர்களும், நகர்மன்ற உறுப்பினர்-களும் வழிமொழிந்தனர். நகராட்சி இன்ஜினியர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து-கொண்டனர்.
