/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் 'வல்வில் ஓரி' விழா; போதைப்பொருள், ஆயுதங்களுக்கு தடை
/
கொல்லிமலையில் 'வல்வில் ஓரி' விழா; போதைப்பொருள், ஆயுதங்களுக்கு தடை
கொல்லிமலையில் 'வல்வில் ஓரி' விழா; போதைப்பொருள், ஆயுதங்களுக்கு தடை
கொல்லிமலையில் 'வல்வில் ஓரி' விழா; போதைப்பொருள், ஆயுதங்களுக்கு தடை
ADDED : ஜூலை 31, 2024 07:16 AM
நாமக்கல்: கொல்லிமலையில் நடக்கும், 'வல்வில் ஓரி' விழாவுக்கு வரும் மக்கள், மது போதை பொருட்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல தடைவிதித்து, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொல்லிமலையில் ஆக., 2, 3ல் நடக்கும், 'வல்வில் ஓரி' விழாவில், 'வல்வில் ஓரி' சிலைக்கு மாலை அணிவிக்க வரும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புதன்சந்தை, நைனாமலை, துத்திக்குளம், காரவள்ளி சோதனைச்சாவடி வழியாக மட்டுமே செல்ல வேண்டும். பிற வழிகளில் செல்ல அனுமதியில்லை. விழா முடிந்து கீழே இறங்குபவர்கள் செம்மேடு, செங்கரை, முள்ளுக்குறிச்சி சோதனைச்சாவடி வழியாக சேந்தமங்கலம் பிரிவு சாலை, அணைப்பாளையம் புறவழிச்சாலை வழியாக, சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.கார், ஜீப்பில் செல்பவர்கள், 'டி' போர்டு பதிவு கொண்ட வாகனங்களில் வரக்கூடாது. அதேபோல், டூவீலர்களில் கண்டிப்பாக செல்ல அனுமதி இல்லை. நான்கு சக்கர வாகனத்தில், சட்ட விதிகளுக்குட்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். அமைப்புகள் சார்ந்த கொடி, பேனர், உருவப்படம் ஆகியவற்றை வாகனத்தில் கட்டியோ, கையிலோ கொண்டு செல்லக்கூடாது.ஒலிப்பெருக்கி உபயோகிக்கக் கூடாது. மது போதை சம்பந்தப்பட்ட பொருட்களையோ, ஆயுதங்களையோ கொல்லிமலைக்கு கொண்டு செல்லக்கூடாது. அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரிய அனுமதி சீட்டு பெற்று, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான் வர வேண்டும். அனுமதி பெற்று மேலே செல்லும் வாகனம், 3 மணி நேரத்தில் கீழே இறங்கி விட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.