/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மழையால் அப்பளம் உற்பத்தி பாதிப்பு
/
மழையால் அப்பளம் உற்பத்தி பாதிப்பு
ADDED : அக் 14, 2024 05:32 AM
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. 10 நாட்களுக்கு மேல் தினமும் மழை பெய்ததால், பல்வேறு பணிகள் முடங்கின. நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் மரவள்ளி கிழங்கு மாவில் அப்பளம் உற்பத்தி செய்வது மிகவும் பிரபலம். இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிசை தொழிலாக அப்பள உற்-பத்தியை செய்து வருகின்றனர். வேக வைத்து, வெயிலில் நன்-றாக காய வைத்து தான் அப்பளம் தயாரிக்கப்படுகிறது.
தொடர் மழை காரணமாக, நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்-டம்பட்டி உள்ளிட்ட பகுதியில் அப்பளம் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொடர் மழையால் ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள வேளாண் நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், களை எடுப்பது, உழவு, பூச்சி மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியாமல் தவித்து வரு-கின்றனர். மேலும், கட்டட பணிகள், செங்கல் உற்பத்தி ஆகிய பணிகளும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.