/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'எச்சரிக்கை பலகை வைத்தும் பயனில்லை'
/
'எச்சரிக்கை பலகை வைத்தும் பயனில்லை'
ADDED : செப் 13, 2024 06:54 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் ஆர்,எஸ்., வழித்தடத்தில், பெரியகாடு பிரிவு சாலை எதிரில், இரவு நேரத்தில் வாகனங்களில் கொண்டு வந்து குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியே சுகாதார கேடாக காணப்பட்டது.
பல சமயத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் சாலை பகுதிக்கு வந்து விடும். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். அதிகளவு குப்பை, கழிவுகள் சேர்ந்தவுடன் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் புகையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் இங்கு குப்பை, கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த இடத்தில் குப்பை, கழிவுகள் கொட்டக்கூடாது, மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என, எச்சரிக்கை பலகை கடந்த மாதம் புதுப்பாளையம் பஞ்., சார்பில் வைக்கப்பட்டது.
எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட பின்பும் குப்பை, கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.