/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேகத்தடைக்கு முன்னதாக எச்சரிக்கை பலகை தேவை
/
வேகத்தடைக்கு முன்னதாக எச்சரிக்கை பலகை தேவை
ADDED : ஜூலை 16, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலை வழித்தடத்தில், குட்டைமுக்கு மற்றும் காவிரி ஆகிய இடத்தில் கொண்டை ஊசி போன்று வளைவு பகுதி உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த, வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேகத்தடைக்கு கடந்த வாரம் வர்ணம் பூசப்பட்டது. பகல் நேரத்தில் வேகத்தடை இருப்பது தெரிவதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்கின்றனர். இரவில் வேகத்தடை இருப்பது தெரியாததால், வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வேகத்தடையை அடையாளப்படுத்த, 'ரிப்ளக்டர்' மற்றும் முன்னதாக எச்சரிக்கை பலகை வைத்து எச்சரிக்கைப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.