/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீர் நிறுத்தம்: விவசாயிகள் கவலை
/
தண்ணீர் நிறுத்தம்: விவசாயிகள் கவலை
ADDED : ஜன 19, 2025 06:54 AM
குமாரபாளையம்: மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, கடந்த, ஜூலையில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. அன்று முதல், நேற்று முன்தினம் வரை, தண்ணீர் வந்துகொண்டி-ருந்தது. இதனால், விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் உள்-ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். ஆறு மாத காலமாக வந்த தண்ணீரால், தட்டான்குட்டை ஊராட்சி, குப்பாண்டபா-ளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் அதிகரித்தது. போர்வெல்களில் தண்ணீர் நிறைந்து இருந்தது.
கால்நடைகளுக்கு போதுமான குடிநீர் கிடைத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி-யடைந்தனர். வழக்கமாக, ஆறு மாத காலத்திற்கு பின் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இனி போர்வெல்களில் தண்ணீர் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்-படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலைய-டைந்துள்ளனர்.

