ADDED : ஆக 28, 2026 06:23 AM
ப.வேலுார்:ப.வேலுார்
அருகே, ஜேடர்பாளையம் பகுதி யில் படுகை அணை உள்ளது. மேட்டூர் அணையில்
இருந்து, 81 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த படுகை அணையின்
இடதுபுறத்தில் ராஜ வாய்க்கால் தொடங்குகிறது.
ஜேடர்பாளையம்
படுகை அணைக்கு, காவிரி தண்ணீர் வருவது குறைந்து விட்டதால்,
ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம் செய்வதாக பொதுப்பணித்துறை
அறிவித்தனர்.
கரூர், நாமக்கல், திருச்சி மாவட்ட மக்களின் குடிநீர்
தேவைகளுக்காகவும், கடைமடை பகுதிகளுக்கு காவிரி தண்ணீர்
செல்வதற்காகவும், கடந்த ஜூன், 29ல், ராஜவாய்க்காலில் தண்ணீர்
நிறுத்தப்பட்டது. 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில், விவசாய பாசன
வசதிக்காக ராஜ வாய்க்காலில் தண்ணீர், நேற்று இரவு, 7:00 மணிக்கு,
ப.வேலுார் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வினோத்குமார்
தலைமையில், ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து, ராஜ வாய்க்காலுக்கு
தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ராஜ வாய்க்கால் மூலம், 16,150
ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராஜ
வாய்க்காலில் தண்ணீர் திறப்பால், விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
