/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோட்டார் ரிப்பேரால் தண்ணீர் பற்றாக்குறை
/
மோட்டார் ரிப்பேரால் தண்ணீர் பற்றாக்குறை
ADDED : ஜூன் 21, 2025 01:13 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் பஞ்., பெருமாள் கோவில் பகுதியில், போர்வெல் மூலமாக மேல்நிலை தொட்டிக்கு நீரேற்றி, அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் மின் மோட்டார் பழுதடைந்தது. இதை சரி செய்வதற்காக, மின்மோட்டாரை கழட்டி எடுத்துச் சென்றனர்.
ஆனால், இதுவரை சரி செய்யவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூலி வேலைக்கும் செல்பவர்கள், தினமும் தண்ணீருக்காக ஆங்காங்கே செல்வதால் வேலைக்கு செல்ல முடிவதில்லை. அதனால், மோட்டாரை உடனடியாக சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.