/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு
/
தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு
தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு
தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு
ADDED : பிப் 20, 2025 01:30 AM
தண்ணீர் தேங்கும் பொருட்களைஅகற்ற அலுவலர்களுக்கு உத்தரவு
புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் யூனியனில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கதிராநல்லுார் பஞ்., அங்கன்வாடி மையம், பஸ் ஸ்டாப், ரேஷன் கடை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தரத்தை ஆராய்ந்து, குடிநீர் மற்றும் நாள்தோறும் பயன்படுத்தக்கூடிய நீரின் அளவை பொறுத்து, தண்ணீரை பிடித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். மேலும், டெங்கு கொசு உற்பத்தி செய்யும் புழுக்கள் உள்ளதா என குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஏ.கே.சமுத்திரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், 5.57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியகுளம் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். பின், கடந்தப்பட்டி அரசு பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். பி.டி.ஓ., சுதா, மகாலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.