/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கலைக்கல்லுாரி பெண்கள் விடுதிக்கு குடிநீர் இணைப்பு
/
அரசு கலைக்கல்லுாரி பெண்கள் விடுதிக்கு குடிநீர் இணைப்பு
அரசு கலைக்கல்லுாரி பெண்கள் விடுதிக்கு குடிநீர் இணைப்பு
அரசு கலைக்கல்லுாரி பெண்கள் விடுதிக்கு குடிநீர் இணைப்பு
ADDED : ஜூலை 04, 2025 01:22 AM
ராசிபுரம், ராசிபுரம், அரசு  கலைக்கல்லாரி  பெண்கள் விடுதிக்கு, 22 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராசிபுரம், திருவள்ளுவர்  அரசு கலைக்கல்லூரியில், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து  வருகின்றனர். இவர்களுக்காக விடுதிகள்  கட்டப்பட்டுள்ளன. இதில் பிற்பட்டோர் நலத்துறை  சார்பில் கட்டப்பட்டுள்ள  மகளிர் விடுதிக்கு,  குடிநீர்  இணைப்பு  வழங்க வேண்டும்  என  கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதையடுத்து  எம்.பி.,  ராஜேஸ்குமார் உள்ளூர் பகுதி மேம்பாட்டு  திட்டத்தின் கீழ், 22.3 லட்சம் ரூபாயை  ஒதுக்கியிருந்தார்.
இதற்காக மேல்நிலைத்தொட்டி  கட்டப்பட்டு குடிநீர்  இணைப்பும்  வழங்கப்பட்டது.  பணிகள் முடிந்து நேற்று துவக்கவிழா நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் கலந்து கொண்டு குடிநீர்  இணைப்பை  செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில்  கல்லுாரி முதல்வர்  சிவக்குமார், முன்னாள்  ஒன்றிய குழு  தலைவர்  ஜெகநாதன் உள்ளிட்ட பலர்  கலந்து
கொண்டனர்.

