/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் தடை, பராமரிப்பு பணியால் நாமக்கல்லில் 2 நாள் குடிநீர் நிறுத்தம்

ADDED : டிச 17, 2024 01:50 AM
நாமக்கல், டிச. 17-
நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாநகராட்சி பழைய டவுன் பகுதிக்கு, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தினமும், பரமத்தி சாலை, தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் எடுத்து வரப்பட்டு, மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நாளை, தமிழக மின் வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, நாளை (டிச., 18) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில், தரைமட்ட தொட்டி சுத்தம் செய்யும் பணி மற்றும் குடிநீர் பிரதான குழாய் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனால், இன்று (டிச., 17), நாளை (டிச., 18) ஆகிய இரண்டு நாட்களுக்கு, நாமக்கல் பழைய நகரப்பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.