/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பெண் குழந்தைகளின் கல்விக்கும், பாதுகாப்பிற்கும் நாம் அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'
/
'பெண் குழந்தைகளின் கல்விக்கும், பாதுகாப்பிற்கும் நாம் அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'
'பெண் குழந்தைகளின் கல்விக்கும், பாதுகாப்பிற்கும் நாம் அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'
'பெண் குழந்தைகளின் கல்விக்கும், பாதுகாப்பிற்கும் நாம் அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'
ADDED : ஜன 13, 2024 03:56 AM
நாமக்கல்: ''நாம் அனைவரும், பெண் குழந்தைகளின் கல்விக்கும், பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் குறித்த, ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் பயிற்சி கருத்தரங்கு, நாமக்கல்லில் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்து, விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டு பேசியதாவது:தமிழக முதல்வர், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தை, தனி கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பெண் குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்து, அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதே. இன்றைய காலத்தில், பெண் குழந்தையையும், ஆண் குழந்தையையும் சமுதாயத்தில் சமமாக சிறந்த முறையில் வளர்ப்பதும், சிறந்த கல்வி அளிப்பதும் பெற்றோரின் கடமை.ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைகளை பாகுபாடின்றி உணவு, கல்வி, விளையாட்டு, ஊட்டச்சத்து என அனைத்தையும் சமமாக வழங்க வேண்டும். கருவிலேயே ஆணா, பெண்ணா என, அறிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெண் குழந்தைக்கு கல்வி வழங்குவதால், அவர்கள் சமுதாயத்தில் முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்க்க முடியும். நாம் அனைவரும், பெண் குழந்தைகளின் கல்விக்கும், பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை கலெக்டர் பிரபாகரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) சசிகலா உள்பட பலர் பங்கேற்றனர்.