/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சிப்காட் திட்டத்தை கைவிடாவிட்டால் பொங்கல் பரிசை புறக்கணிப்போம்'
/
'சிப்காட் திட்டத்தை கைவிடாவிட்டால் பொங்கல் பரிசை புறக்கணிப்போம்'
'சிப்காட் திட்டத்தை கைவிடாவிட்டால் பொங்கல் பரிசை புறக்கணிப்போம்'
'சிப்காட் திட்டத்தை கைவிடாவிட்டால் பொங்கல் பரிசை புறக்கணிப்போம்'
ADDED : ஜன 08, 2024 11:52 AM
நாமக்கல்: 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கத்தை புறக்கணிப்போம்' என, ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மோகனுார் தாலுகாவில் உள்ள, வளையப்பட்டி, பரளி, என். புதுப்பட்டி, ஆண்டாபுரம், அரூர் சுற்றுப்புற பகுதிகளில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, வருவாய்த்துறை மூலம் நில அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. மோகனுார் பகுதியில் 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, 'சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினர், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், என்.புதுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, நேற்று காதில் வெற்றிலையை சுற்றி, நுாதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கொ.ம.தே.க., ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், 'சிப்காட் எதிர்ப்பு இயக்க' ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 'சிப்காட்' திட்டத்தை கைவிடக்கோரி கோஷமிட்ட விவசாயிகள், 'பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப்பணத்தை இப்பகுதிய விவசாயிகள் வாங்க மாட்டோம்' என,
அறிவித்தனர்.