'காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்'
'காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்'
ADDED : மே 24, 2026 05:12 AM
நாமக்கல்:''வரும், 26 முதல், டாஸ்மாக் கடையில், காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்,'' என, கூட்டுக்குழு தலைவர் நீதிநாயகம் கூறினார்.
மாவட்ட டாஸ்மாக் அனைத்து கூட்டுக்குழு சங்க அவரச கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. கூட்டுக்குழு தலைவர் நீதிநாயகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விவாதிக்கப்பட்டது.
அப்போது, கூட்டுக்குழு தலைவர் நீதிநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டம் முழுவதும், வரும், 26 முதல், டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். அதேபோல், ஒவ்வொரு மதுபான பாட்டிலில் ஒட்டப்படும், 10 ரூபாய் ஸ்டிக்கரை, டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க உள்ளோம்.
மேலும், 'இரவு, 10:00 மணிக்கு கடையை மூடிவிட வேண்டும்' என, டாஸ்மாக் நிர்வாகம் மறுபரிசீலனை செய்து, கடையை இரவு, 9:00 மணிக்கு மூட அனுமதிக்க வேண்டும். பணியாளருக்கு, 8 மணி நேரம் மட்டுமே வேலை வாங்க வேண்டும். பணியாளர்கள் இறந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும். தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
