'காலி பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் 25 வரை மட்டுமே செயல்படுத்துவோம்'
'காலி பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் 25 வரை மட்டுமே செயல்படுத்துவோம்'
ADDED : மே 19, 2026 02:06 AM
நாமக்கல்:'காலி
பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை, வரும், 25 வரை மட்டுமே செயல்படுத்துவோம்' என, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின்
கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. தொழிலாளர்
விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் நீதிநாயகம் தலைமை வகித்தார்.
சட்ட உரிமையாளர்கள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர்
தமிழ்செல்வன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் மகேஷ்வரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இன்று முதல், நாமக்கல்
மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும், அரசு
நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யமாட்டோம். காலி
பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை, வரும், 25 வரை மட்டுமே
செயல்படுத்துவோம். அதற்கு பின் நிர்வாகம் மாற்று வழியில்
காலிபாட்டிலை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.
முதல்வர் விஜய்
அறிவிப்பின்படி, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பணியாளர்களை
உடனடியாக பனி மூப்பு அடிப்படையில், பணி தொடர்ச்சியுடன் கூடிய பின்
அரசு துறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகள் அடங்கிய
மனுவை, நாளை அனைத்து தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து, மாவட்ட கலெக்டர்,
மாவட்ட மேலாளரிடம் அளிப்பது, நமது கோரிக்கையை அரசு உடனடியாக
பரிசீலிக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து
தொழிலாளர்களும் ஒன்று கூடி இறுதி முடிவு எடுத்து அதன்படி
நடந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.
