
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருப்பாவை பக்த குழுவின், 10ம் ஆண்டு விழாவையொட்டி வரதராஜ பெருமாள் மற்றும் ஆண்டாள் அம்பாளுக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது.
முன்னதாக, உற்சவ மூர்த்-தியான வரதராஜ பெருமாள் மற்றும் ஆண்டா-ளுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபி-ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆண்டாள் சன்னதியில் இருந்து திருக்கல்யாண சீர் வரிசை-யுடன் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் மாலை, வர-தராஜ பெருமாளுக்கு சாத்துப்படி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு ராஜ அலங்காரத்தில் வரத-ராஜ பெருமாள் மற்றும் ஆண்டாள் தேரோடும் வீதியில் வாணவேடிக்கையுடன் பவனி வந்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருப்பாவை பக்த குழுவினரால் பிரசாதம் வழங்கப்பட்டது.

